Thursday 28 January 2016

"Society of Reparation" promoting Fatima Message and Devotion of Reparation and Total consecration to the Immaculate Heart of Mary



  மரியாயின் மாசற்ற இருதய


  பரிகார சபை 

பதிவு எண் 11/2015



பாத்திமா செய்திகளைப்  பரப்புவதும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு 
பரிகார பக்தியையும் முழு அர்ப்பணத்தையும்
பயிற்சி செய்வதுமே  பரிகார சபையின் அலுவல்  ஆகும் . 


அன்புடையீர்,

பாத்திமா மாதா  காட்சியளித்த நூற்றாண்டு  (1917-20170) விழாவிற்கு தயாரிப்பாக, நமது பங்குகளிலும் சிற்றூர்களிலும் பள்ளிக்கூடங்களிலும் மண்டபங்கள், தெரு முனைகளிலும்  மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தி பற்றிய கீழ்காணும் பயிற்சிக் கூட்டங்களும்  பக்தி முயற்சிகளும் நடத்திட "பரிகார சபை" திட்டமிட்டிருப்பதால், இந்நிகழ்சிகளில் கலந்து பயிற்சிபெற்று , தங்கள் இடங்களில் நடத்த விரும்புவோர் எம்முடன் தொடர்பு  கொண்டு ஏற்பாடு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

1. மாதாவின் பாத்திமா காட்சி செய்தி விளக்க கூட்டங்கள் .
2. பாத்திமா காட்சி பற்றிய படக்காட்சிகள் 
3. பரிகார பக்தி பற்றிய கருத்தரங்குகள் தியானங்கள் 
4. பாரம்பரிய ஞான உபதேச வகுப்புகள் 
5. மரியாயின் பரிகாரப் பேரணிகள் 
6. ஜெபமாலை பக்தி பற்றிய பயிற்சி பாடங்கள் 
7. முதல்  சனி பக்தி முயற்சி கொண்டாட்டங்கள் 
8. பரிகார முழு இரவு ஆராதனைகள் 
9. மரியாயின் மாசற்ற இருதய முழு  அர்ப்பண தயாரிப்புகள் 
10. இல்லங்களில் சேசு, மரிய இருதயங்களின் அரசாட்சியை 
நிறுவுதல், புதுப்பித்தல்  

மாதாவுக்கு மிகவும் விருப்பமான இத்திட்டத்தில் மரியாயின்  மாசற்ற இருதய சபையுடன் இணைந்து ஊழியம் செய்ய விரும்பும் குருக்கள், துறவற சகோதரர்கள், சகோதரிகள், மரியாயின் சேனையாளர்கள் மனமுவந்து வரும்படி அன்புடன் அழைக் கிறோம் .

"என்னை மக்கள் அறிந்து நேசிக்கும்படி சேசு உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார் . உலகத்தில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த சேசு ஆசிக்கிறார்." (பாத்திமாவில் மாதா (ஜூன் 13 1917)


"ஆசீர்வதிக்கப் பெற்ற தம் அன்னை இதுவரையிளுக் இருந்ததைவிட அதிகமாக அறியப்பட வேண்டும், அதிகமாக நேசிக்கப்பட வேண்டும் என கடவுள் விரும்புகிறார்". .... "வரப்போகிற ஆபத்து நிறைந்த  காலங்களில் சேசுவினுடையவும் மரியாயினுடையவும் தைரியமும் வீரமும் கொண்ட இருபாலரும் ஆன போர் வீரர்களைக்கொண்ட பலம் வாய்ந்த படையணி ஓன்று புறப்பட்டு, பசாசையும் உலகத்தையும் கெட்டுப்போன மனித சுபாவத்தையும் எதிர்த்துப் போராட வரும் எனக்காண்கின்றேன்." இப்படி புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் முன்னுரைதுள்ளார். (உண்மை பக்தி எண். 55, 114)

தொடர்பு: அலைபேசி எண்: 9360250211
              மின் அஞ்சல்: pancrasraja@gmail.com ; pancrasraja@rediffmail.com 
          Tamil Web: parigaarasabai.blogspot.com  
          English Web: devotionofreparation.blogspot.com  

                                                                                          இவண் 

                                                                     சுவாமி பங்கிராஸ் M. ராஜா  

                                                                                   இயக்குனர் 
முகவரி: ஆயர் இல்லம், தூத்துக்குடி 

நாள்: 02-01-2016



                 முதல் சனி பக்திமுயற்சி கொண்டாட்டங்கள்                                                                      ஆரம்பித்துவிட்டன 




2016 ஜனவரி மாதத்திலிருந்து முதல்சனி பக்திமுயற்சி கொண்டாட்டங்கள் தூத்துக்குடி மறைமாவட்டதிலுள்ள கீழ்க்காணும் இடங்களில் நடைபெற்று வருகின்றன. திருயாத்திரீகர்கள் .தங்கள் வசதிக்கேற்ப இக்கொண்டாட்டங்களில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் 


1. வடக்கன்குளம் - மதியம் 11-00 முதல் 1-00 மணி வரை 
   (வெளியூர் வாசிகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும்)

2. பணகுடி - பிற்பகல் 3-00 முதல் 5-00 மணி வரை 
   (வெளியூர் வாசிகளுக்கு இலவச சிற்றுண்டி வழங்கப்படும்)

3. இளங்குளம்  - மாலை 6-00 முதல் 8-00 மணி வரை 
   (வெளியூர் வாசிகளுக்கு இலவச  இரவு உணவு வழங்கப்படும்)

முதல்சனி பக்தி முயற்சியின் நிகழ்ச்சிநிரல் 

1. வாரும் சிருஷ்டிகர் ஸ்பிரித்துஸ்  (முன்னுரை)
2. பாத்திமா மாதா  சுரூப பவனி  (பவனிப்பாடல்)
3. தொடக்கப்பாடல் 
4பரிகார திருத்தல  ஜெபம் 
5. பாடல் - பாதிமாபதி தாயே 
6. தியானித்து ஜெபமாலை ஜெபித்தல் 
8. பரிகார தியான சிந்தனை (15 நிமிடம்)
9. பரிகார மாதா நவநாள் ஜெபம் 
10. மரியாயின் மாசற்ற இருதத்திற்கு தன்னை முழுதும் அர்ப்பணித்தல் 
11. மாதா காட்சிப் பாடல் (பாத்திமா ஆவே)
12. எழுந்தேற்ற ப் பாடல் (சேசுவே எழுந்தருளுவீர்) 
13. பாத்திமா சம்மனசு ஜெபங்கள் 
14. சேசு, மரிய இருதயங்களுக்கு நிந்தைப் பரிகார ஜெபம் 
15. பாவிகளுக்கு அடைக்கலமே 
16. தாந்தும் ஏற்கோ சாக்ரமெந்தும் 
17. திவ்விய நற்கருனணயினால் வியாதியஸ்தரை மந்திரித்தல் 
18. தேவ நற்க்கருனணப்  பவனிப் பாடல் 
19. தேவ ஸ்துதிகள் 
20. ஆவே மாரிஸ் ஸ்தெல்லா . 
      (பாவ சங்கீர்த்தனம், திவ்வியபலி பூசை, பரிகார நன்மை தொடரும்)


இப்பக்தி முயற்சிக்கான சில வெளியீடுகள் 

1. முதல்சனி பக்தி முயற்சிக் கையேடு 
2. முதசனி பக்தி விளக்கத் துண்டு பிரசுரங்கள் (தமிழ், ஆங்கிலம்)
3; பரிகார பக்திக் கையேடு 
4. தலை வெள்ளி, முதல்சனி பக்தி முயற்சிக் கையேடு 
5. பாத்திமாவின் குரலொலி (தமிழ் சிற்றேடு)
6. ஞானோபதேசம் கற்பிக்கும் முறை (தமிழ் சிற்றேடு)
7. மரியாயின் மாசற்ற இருதய படம் (பெரியது)
8. சேசு மரிய இருதயங்களின் படம் (பெரியது)
9. பாத்திமா மாதா  படம் (சிறியது 
10. பரிகார சபையின் செயல் திட்டங்கள் - துண்டு பிரசுரம் 


இல்லங்களில் சேசு, மரிய இருதயங்களின் 
அரசாட்சியை நிறுவுதல் 



சேசுவின் திரு இருதயத்தினுடையவும் மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அரசாட்சியைக்  குடும்பங்களில் நிறுவ விரும்புவோர் தங்களுக்கு வசதியான நாளில் ஒரு குருவானவரை அழைக்கலாம். 

தொடர்பு: சுவாமி  பங்கிராஸ் எம். ராஜா
Cell: 9360250211
Email: pancrasraja@gmail.com  
Web: parigaarasabai.blogspot.com  


  
புனித லூயிஸ் மோன்ட்போர்ட்  முறைப்படி 
பராக்கின்றி ஜெபமாலை ஜெபிக்கும் வகை 
(தியானித்து ஜெபமாலை சொல்லும்போது நமது கற்பனா சக்தியை ஒருமுகப்படுத்தி, பராக்குகளைத்  தணிக்கும் விதம்) 

இதைச் செய்வதற்கு, ஒவ்வொரு அருள் நிறைந்த மந்திரத்திலும் நாம் தியானிக்கும் தேவ இரகசியத்தை நினைவில் கொள்ளும் விதமாய் ஒரு  சில வார்த்தைகளைச் சேர்த்துக் கொள்வது. 

இவ்வார்த்தைகள், அருள் நிறைந்த மந்திரத்தில் "சேசுவும்" என்னும் வார்த்தைக்கு ஆடை மொழியாக அமையும்படிச் சேர்க்கப்பட வேண்டும். 

செபமாலையின் ஒவ்வொரு அருள்நிறைந்த மந்திரத்திலும் சேர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் 

சந்தோஷ தேவ இரகசியங்கள்::

1.வது தேவ இரகசியத்தில்   ("Jesus becoming  man"
உம்முடைய திரு வயிற்றின் கனியாக "மனிதாவதாரம் ஆகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

2. வது தேவ இரகசியத்தில் ("Jesus Sanctifying"
உம்முடைய திரு வயிற்றின் கனியாகி "எம்மை அர்ச்சிக்கிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. 

3. வது தேவ இரகசியத்தில் ("Jesus born in poverty"
உம்முடைய திருவயிற்றின் கனியாகி "தரித்திரத்தில்  பிறக்கிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. 

4. வது தேவ இரகசியத்தில் ("Jesus Sacrificed"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "பலியிடப்  படுகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. 

5. வது தேவ இரகசியத்தில் ("Jesus Holy of Holies"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "தேவ திருச் சந்நிதானம் ஆகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

சந்தோஷ தேவ இரகசியங்களின் வரப்பிரசாதம் எங்கள் உள்ளத்தில் இறங்கி, எங்களை உண்மையாகவே புனிதமாக்குவதாக 

துக்க தேவ இரகசியங்கள்:

1. வது தேவ இரகசியத்தில் ("Jesus in His agony"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "மரண அவஸ்தைப் படுகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

2. வது தேவ இரகசியத்தில் ("Jesus Scourged"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "கட்டுண்டு அடிக்கப் படுகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

3. வது தேவ இரகசியத்தில் ("Jesus Crowned with thorns"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "முள் முடி சூட்டப்  படுகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

4. வது தேவ இரகசியத்தில் ("Jesus Carrying His Cross "
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "சிலுவை சுமந்துகொண்டு போகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

5. வது தேவ இரகசியத்தில் ("Jesus Crucified and died"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "சிலுவையில் அறையுண்டு
மரி க்கிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

துக்க தேவ இரகசியங்களின் வரப்பிரசாதம் எங்கள் உள்ளத்தில் இறங்கி, எங்களை உண்மையாகவே பொறுமை உள்ளவர்களாக்குவதாக 

மகிமை தேவ இரகசியங்கள்:

1. வது தேவ இரகசியத்தில் ("Jesus Risen from the dead"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "உயிர்த்து எழுகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

2. வது தேவ இரகசியத்தில் ("Jesus ascending to Heaven"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "பரலோகத்திற்கு ஆரோகணம்  ஆகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

3. வது தேவ இரகசியத்தில் ("Jesus Filling us with the Holy Ghost"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "ஸ்பிரிதுஸ் சாங்க்துவினால் எம்மை நிரப்புகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

4. வது தேவ இரகசியத்தில் ("Jesus Raising Thee up"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "உம்மை பரலோகத்திற்கு எடுத்துக் கொள்கிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

5. வது தேவ இரகசியத்தில் ("Jesus Crowning Thee"
உம்முடைய திருவயிற்றின்கனியாகி "உகக்கு மணி முடி சூட்டுகிறவரான" சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

மகிமை தேவ இரகசியங்களின் வரப்பிரசாதம் எங்கள் உள்ளத்தில் இறங்கி, எங்களை உண்மையாகவே நித்திய சந்தோஷம் அடையசெய்வதாக






மரியாயின் மாசற்ற இருதய

பரிகார சபை 

The Society of Reparation
to the Immaculate Heart of Mary


Welcome to Society of Reparation

பாத்திமா செய்திகளைப்  பரப்புவதும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு 
பரிகார பக்தியையும் முழு அர்ப்பணத்தையும்
பயிற்சி செய்வதுமே  பரிகார சபையின் அலுவல்  ஆகும் . 


பாத்திமா பரிகார சந்நிதானம் 
கிறிஸ்து ராஜாபுரம் 

புதிய செய்திகள் 


பரிகார சபையின் இயக்குநர் சில குருக்கள், இல்லற அப்போஸ்தலர்களுடன் பல ஊர்களில் சென்று முதல்சனி பக்தியும் பாத்திமா செய்தி விழக்க கூட்டங்களும் பரிகார பக்தி பற்றிய தியான கருத்தரங்குகளும் நடத்தி வருகிறார்கள். 

இவைகளில் பங்கேற்று பரிகார பக்தியைப் பயிற்சி செய்து பயனடைய விரும்புவோர் கீழ் காணும் அலைபேசி, மினஞ்சல், ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.  

Contact address

Fr. Pancras M. Raja,
Room No. 4,
Xavier Hermitage,
St. Francis Xavier Home,
43 Innaciarpuram,
Tuticorin- 628002,
Tamilnadu, India.

Phone: 0461-2331073
Skype: pancrasraja9


Contact person:
Fr. Pancras M. Raja
Cell: 9360250211 ; +91 9944104697
Email: pancrasraja@gmail.com ;
pancrasraja@rediffmail.com
Tamil Web: parigaarasabai.blogspot.com
English Web: devotionofreparation.blogspot.com





அதிகாரம் 1
பரிகார சபையின் இலக்கணம் 


1. கொள்கை வசனம் (Motto)

"முழுவதும் உமக்கே" = TOYUS TUUS 

முழுவதும் உமக்கே யான் சொந்தம் ஓ! பரிசுத்த மாதாவே, 
நான் முழுவதும் உமக்கே சொந்தம்  

எல்லாம் மாதாவுக்கே 

"சேசுவின் இராச்சியம் வரும்படியாக மாதாவின் இராச்சியம் வருக!" 

    2. இலக்கணம் 


பரிகார சபை என்றால் என்ன? 

மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு பரிகார சபை என்பது கத்தொலிக்கருக்கான ஒரு சங்கம். இதன் உறுப்பினர்கள் (1) நமது திவ்விய இரட்சகராகிய  சேசு நாதருக்கு முழுவதும் சொந்தம் ஆகும்படியாக, புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் ஏற்படுத்திய முறைப்படி தங்களையே மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு முழு அர்ப்பணம்  செய்துள்ளவர்கள். (2) பாத்திமா செய்திகளில் சொல்லப் பட்டபடி திருச்சபை யின் உண்மையான புதுப்பித்தலையும் உலக சமாதானத்தையும் கண்டடையும் படியாக இவர்கள் பாத்திமா செய்தியைப் பரப்புவதற்காகவும் மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தியை வளர்ப்பதற்க்காவும் தங்களால் ஆன மட்டும் ஜெபிக்கவும் உழைக்கவும் உறுதி மொழி எடுத்துள்ளனர்.

3. இந்த சபை எப்பொழுது எங்கே ஆரம்பிக்கப்பட்டது?

இந்த சபை 1980-ல் இந்தியாவிலுள்ள தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த தைலாபுரம் பாத்திமா பரிகார கெபியில் ஆரம்பிக்கப்பட்டது.

4. இதன் தலைமை அலுவலகம் எங்குள்ளது?

இதன் தலைமை அலுவலகம் தூத்துக்குடியிலுள்ள சேவியர்
முனிவர் இல்லத்தில் உள்ளது. 

முகவரி:

சேவியர் முனிவர் இல்லம் (கதவு எண் 4)
புனித சவேரியார் குருக்கள்  இல்லம்  
43 இன்னாசியார் புரம் 
               தூத்துக்குடி 628 002, தமிழ்நாடு, இந்தியா                    

                                                    

உறுப்பினர் இயல்பு 


5. இச்சபையில் யார் யார் உறுப்பினர் ஆகலாம்?

எல்லா கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் குறிப்பாக மாதா மீது அன்பும் பக்தியும் உள்ளவர்கள்.

6. உறுப்பினர்களின் கடமை என்ன  ?

1) அவர்கள் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு முழு அர்ப்பணம் செய்திருக்க வேண்டும். இவ்வர்ப்பணத்தின் அடையாளமாக அவர்கள் கார்மேல் மாதா உத்தரியம் அணிந்திருக்க வேண்டும். தினமும் பாத்திமா வாக்குறுதி அல்லது மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பண முயற்சியும் குறைந்த பட்சம் 53 மணி ஜெபமாலையும்  சொல்லிவர வேண்டும். 

2) அவர்கள் பாத்திமா செய்திகளை நன்கு அறிந்து அதை எங்கும் பரப்பி வரவேண்டும். (அதற்கான ஒரு மணி நேர பவர் பாயிண்ட் படக்காட்சி எம்மிடம் உண்டு) 

3) அவர்கள் பரிகார பக்தியைத் தங்கள் விருப்ப பக்தியாகக் கடைபிடித்து வருவதோடு, அதைத் தங்களுக்குள்ளும் பிறரிடமும் பரப்பி வரவேண்டும்.

7. இவ்வுறுப்பினர்களுள் வயது வரம்புக்கேற்ப பிரிவுகள் உண்டா?

ஆம்.

 1) 13 வயதுக்குட்பட்ட மரியாயின் பரிகார சிறுவர்கள், சிறுமியர்களுக்கு தனித்தனியாக முறையே பிரான்சிஸ்கோ, ஜசிந்தா என்னும் பாத்திமா சிறுவர்கள் பெயரால் இரு குழுக்கள் இயங்கி வரும்.


2) 14 முதல் 18 வயது வரையுள்ள மரியாயின் பரிகார குமாரர்கள், குமாரத்திகள் என்னும் பெயரால் தனித்தனியாக முறையே வாலிப ஆண்களுக்கும் வாலிப பெண்களுக்கும் இரு குழுக்கள் இயங்கி வரும்.

3) 18 வயதுக்கு மேல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் "மரியாயின் பரிகார சபை" என்னும் பெயரால் இரு குழுக்கள் இயங்கி வரும்.

8. இம்மரியாயின் பரிகார சபை உறுப்பினர்களுடைய 
    கடமைகள் என்ன?

இவர்கள் தங்கள் முதல் கடமையாக "மரியாயின் பரிகாரப் பேரணி" யின் (cenacle) வாராந்தர கூட்டங்களுக்கு ஒழுங்காக  வருகை தரவேண்டும். விசேஷமாய், இந்த கூட்டங்களில் நடைபெறும் ஜெபமாலை, சின்ன குறிப்பிடம், பாத்திமா செய்தி, பரிகார பக்தி விளக்கங்களில் பங்கேற்க வேண்டும். இவ்வப்போஸ்தல அலுவல் சார்ந்த திட்டங்கள் பற்றி கருத்துப் பகிர்தல். எல்லாவற்றுக்கும் மேலாக ஜெபமாலை குழுக்களை உருவாக்கி அவைப் பலுகும்படிச் செய்வது. இச்ஜெபமாலைக் குழக்களில் உறுப்பினர் அல்லாதவர்களும் கத்தோலிக்கர் அல்லாதவர்களும் வரும்படி அழைக்கலாம். 

இரண்டாவதாக இவர்கள் "பரிகார பக்தி" கையேட்டினை வாசித்து இப்பக்தியின் முக்கியத்துவத்தையும்  அதைக் கடைபிடிப்பது பற்றியும் விளக்கம் பெறுவார்கள். (காண்: அதிகாரம் 4, என். 5 - மரியாயின் பேரணி "செனக்கிள்" கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்)

வெளி ஊர்களில் வசிப்பவர்கள் சமயம் வாய்க்கும்போது இக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். 

9. இந்த சபையின் அதிகாரபூர்வமான அந்தஸ்து என்ன?

திருச்சபை சட்டம் 298 - ன் படி குருக்களோ விசுவாசிகளோ அல்லது குருக்களும் விசுவாசிகளும் சேர்ந்தோ, தனிப்பட்ட முறையில் இப்பக்தி முயசியைக் கடிபிடிப்பதில் ஈடுபடலாம். மேலும் திருச்சபை சட்டப்படி (299)  இப்பரிகார பக்தியை தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்ய தங்களுக்குள் முடிவு செய்து கொண்டு, பாத்திமா செய்தியைப் பரப்பி,   பாத்திமா மாதாவின் வேண்டுகோள்களுக்கிணங்க,  பரிகார அப்போஸ்தலர்களை உருவாக்கி வழிநடத்த விரும்புகிறவர்கள் இவ்வப்போஸ்தல  அலுவலில் ஈடுபடலாம்.

ஆயினும், இவ்வப்போஸ்தல அலுவலில் திருவ்ழிபாட்டுச் சடங்குகள் பகிரங்கமாக நிறைவேற்றப்படும்போது அல்லது ஒரு துறவற சபை உருவாகும் போது, உரிய மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் (திருச்சபை சட்டம் 301).

ஆனால், இன்று நிலவி வரும் வழக்கத்துக்கு மாறான சூழ்நிலையின் காரணமாக , இந்த சபை, தற்காலிகமாக (அதாவது ஒரு ஆயரின் முறையான அங்கீகாரம் பெறும்வரை), தனிப்பட்ட முறையில் கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியத்தையும் பரிகார பக்தியையும் பிரமாணிக்கமாய் அநுசரிக்கிற ஒரு எதிர்கால துறவற சபையின் உறுப்பினர்களை உருவாக்கி வருகிறது.  

10. சாதாரண உறுப்பினர்கள் 

பாத்திமா உறுதி மொழியில் கையொப்பமிட்டு கீழ்காணும் கடமைகளை நிறைவேற்றுகிறவர்கள் பரிகார சபையின் சாதாரண உறுப்பினர் ஆகிறார்கள்.

1. அன்றாடம் தங்கள் கடமையை நிறைவேற்றுவதில் ஏற்படும் துன்பங்களை 
ஒப்புக்கொடுப்பது.

2. பாத்திமா உறுதிமொழியின் அற்பண ஜெபத்தை தினமும் சொல்வது அல்லது மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அற்பண  முயற்சி  ஜெபத்தை சொல்வது.

3. தினசரி குறைந்தபட்சம் 53 மணி ஜெபமாலை தியானித்து சொல்வது.

4. மரியாயின் மாசற்ற இருதத்திற்கு தங்கள் அர்ப்பணத்தின் வெளி அடையாளமாக கார்மெல் மலை மாதா உத்தரியம் அணிவது.

11. முழு அர்ப்பண உறுப்பினர்கள் 

மரியாயின் மாசற்ற இருதய பரிகார சபையின் முழு அர்ப்பண உறுப்பினர்கள் ஆவதற்கு கீழ்காணும் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

1. பாத்திமா உறுதி மொழியில் கையொப்பமிட்டு, அன்றாடம் தங்கள் கடமையை நிறைவேற்றுவதில் ஏற்படும் துன்பங்களை ஒப்புக்கொடுத்து மேலே கூறப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவது மட்டுமில்லாமல் 

2. அவர்கள் "உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை" அனுப்பி தங்கள் பெயரை தங்களுக்குரிய தலைமை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.


3. அவர்கள் மரியாயின் பரிகாரப் பேரனிடின் வாராந்தர கூட்டத்தில் (cenacle ) தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.

4. அவர்கள் புனித லூயீஸ் மரிய மொன்போர்ட் வகுத்துள்ள ஒழுங்குகளின்படி 33 நாள் தயாரிப்பு செய்து மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு முழு  அர்ப்பணம் செய்திருக்க வேண்டும்.  

இத்தகைய முழு அர்ப்பண உறுப்பினர்களிலிருந்து தங்களையே முழுநேர அப்போஸ்தலர்களாக நேர்ந்து கொள்கிறவர்கள், தங்கள் ஆன்மீக இயக்குனர்களின் வழி காட்டுதலுக்கிணங்க பரிகார சபையின் இல்லற அப்போஸ்தலர் குழுவை உருவாக்குவார்கள். இந்த இல்லற அப்போஸ்தலர் குழுவானது பரிகார சபையின் துறவற சபைக்குரிய அழித்தலின் விளை நிலமாக இருக்கும்.

12. துறவற சபை உறுப்பினர்கள் 

போதுமான உறுப்பினர்கள் உருவாகி வரும்போது, உரிய மேலதிகாரிகளின் அங்கீகாரத்துடன், மரியாயின் மாசற்ற இருதய பரிகார பையின் துறவற மடங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நிறுவப்படும்.

தரித்திரம், விரத்தத்துவம், கீழ்ப்படிதல் என்னும் மூன்று வார்த்தப்பாடுகள் கொடுத்து வாழும் இத்துறவற உறுப்பினர்கள் கீழ்காணும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவர்.


1) இரண்டாம் சபை (lay) சகோதரர்கள், சகோதரிகள் 

3) அப்போஸ்தல சபைத் துறவற சகோதரர்கள், சகோதரிகள் 

2) வேதபோதக சபைத் துறவற குருக்கள் 

4) அடைபட்ட  சந்நியாச சபைக் குருக்கள், கன்னியர் சபை சகோதரிகள் 


ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே இயங்கிவரும் இந்நான்கு வகை சபைகளும் "மரியாயின் மாசற்ற இருதய பரிகார சபை" என்னும் ஒரே குடும்பத்தைச் சார்ந்ததாகவே இருக்கும்.

13. இரண்டாம் சபை (Lay) சகோதரர்கள், சகோதரிகள் 

இரண்டாம் சபை (lay) சகோதரர்கள், சகோதரிகள் கல்யாணம் ஆனவர்களாகவோ கல்யாணம் ஆகாதவர்களாகவோ  இருக்கலாம். ஆனால் இனிமேலாக தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்டுக்கொருமுறை புதுப்பிக்கும் வார்த்தைப்பாடு கொடுத்து மாதாவுக்கு ஊழியம் புரிய அர்ப்பணித்தவர்கள்.

ஆண்டுக்கொருமுறை புதுப்பிக்கும் வார்த்தைப்பாடு கொடுத்து மாதாவுக்கு ஊழியம் புரியும் இவர்கள், இத்துறவற அந்தஸ்திலிருந்து விடுபட விரும்பினால், தங்கள் வர்த்தைப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படலாம்.

14. அப்போஸ்தல சபைத் துறவற சகோதரர்கள், சகோதரிகள்

அப்போஸ்தல சபைத் துறவற சகோதரர்கள், சகோதரிகள் திருமணம் செய்யாத கண்ணியர்களாய் இருக்கவேண்டும். மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு இவர்கள் செய்த முழு அர்ப்பனத்திற்கும் அதிகமாக தங்கள் அர்ப்பணத்தில் உத்தமமாய் விளங்க இவர்கள் உறுதிமொழி கொடுப்பார்கள். பின்னர் தங்கள் நித்திய வார்த்தைப்பாட்டினால் பரிகார பக்தியைப் பயிற்சி செய்யவும் பரப்பவும் கடினமாக உழைப்பார்கள்.

துறவற சகோதரர்கள், சகோதரிகளிலிருந்து தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் துறவற குருக்கள், கன்னியர்கள் நிலைக்கு உயர்த்தப்படலாம்.

15. வேதபோதக சபைத் துறவற குருக்கள் 


பாரம்பரிய குருத்துவத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் முறைப்படி தர்க்க சாஸ்திர, வேத சாஸ்திர பயிற்சி பெற்று  சிறிய பட்டங்கள் (Minor orders), பெரிய பட்டங்கள் (Major Orders) வழங்கப்பட்டு பாரம்பரிய குருப்பட்ட சடங்குப்ளுக்கு உட்பட்டு குருப்பட்டம் பெறுவதுடன் மூன்று துறவற வார்த்தைப்பாடுகள் கொடுக்க வேண்டும். இந்த வேதபோதக சபைத்  துறவற குருக்களிலிருந்து பரிகார சபையின் கீழ்காணும் நிகழ்சிகளை நடத்தும்படி குருக்கள் அழைக்கப்படலாம். 


- முதல் சனி பக்தி முயற்சிகள், பரிகார முழுஇரவு ஆராதனைகள், தியானங்கள், ஞான ஒடுக்கம், ஞான ஆலோசனைகள், பாத்திமா யாத்திரக்கன்னி  மாதா சுரூப பவனிகள், பாத்திமா செய்தி விளக்க கூட்டங்கள் இவை முதலிய மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தி, பாத்திமா அப்போஸ்தல அலுவல்களில் முழு நேரமும் ஈடுபட்டிருப்பார்கள்.

இந்த குருக்கள் எப்போதும் பாப்பரசருடனும் பாரம்பரிய கத்தோலிக்க திருச்சபையுடனும் இணைந்திருப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

16. அடைபட்ட சந்நியாசிகள், கன்னியர்கள் 

மாதா சகோதரி லூசியாவைத் தனது எஞ்சிய வாழ்நாள் முழவதும் ஒரு துறவற சபையில் அடைபட்டிருந்து பரிகாரம் செய்யும்படி அழைத்தார்கள். ஆகவே இந்த பக்தி முயற்சியின் உத்தமமான பயிற்சியானது, அடைபட்ட சந்நியாச, கன்னியர் சபையில் சேர்ந்து, தரித்திரம், கீழ்ப்படிதல், விரத்தத்துவம், அடைபட்டிருத்தல் ஆகிய நான்கு வார்த்தைப்பாடுகளை அனுசரிப்பதில் அடங்கியிருக்கிறது. 


17. ஜெப, பரித்தியாக அபோஸ்தளர்கள் 


முதுமை அல்லது வியாதியினால் மேற்காணும் அப்போஸ்தல அலுவல்களில் பங்கேற்க முடியாதவர்கள், இந்த சபையில் ஜெப, பரித்தியாக அபோஸ்தலர்களாக பெயர் கொடுத்து உரறுப்பினர்களாகலாம்.



உறுப்பினர் விண்ணப்ப படிவம் 



பெறுனர்: 

இயக்குனர் 

"மரியாயின் மாசற்ற இருதய பரிகார சபை "
சேவியர் முனிவர் இல்லம் 
43 இன்னாசியார்புரம் 
தூத்துக்குடி 628 002
தமிழ்நாடு, இந்தியா 


சங்கைக்குரிய சுவாமி அவர்களே,


நான் மரியாயின் மாசற்ற இருதய பரிகார சபையில் உறுப்பினர் ஆகி மாதாவின் அழைத்தலுக்கு செவிமடுத்து என்னால் இயன்றவரை மாதாவின் அர்ப்பண ஜீவியத்தில் வாழவும், மரியாயின் மாசற்ற இருதயப் பரிகார பக்தியைக் கடைபிடிக்கவும் விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை அந்தஸ்த்துக்கு ஏற்ற முறையில் இந்த அபோஸ்தலத்துவ அலுவலில் ஈடுபட மனதாயிருக்கிறேன்.பரிசுத்த கன்னி மரியாயின் கரங்களில் தகுந்த கருவியாக நான் இயங்கிவர எனக்கு வழி காட்டுங்கள்.


                                                                                        கையொப்பம் 

என் பெயர் ................................................................................

என் முகவரி............................................................................

                         ............................................................................

அலைபேசி ..............................................................................

மின் அஞ்சல்...........................................................................

(இப்படிவத்தைப் பூர்த்தி செய்து கீழ்காணும் அஞ்சலக முகவரிக்குத்  தபாலில் அனுப்பலாம். அல்லது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.)


அஞ்சலக முகவரி:

Fr. Pancras M. Raja,
Room No. 4,
Xavier Hermitage,
St. Francis Xavier Home,
43 Innaciarpuram,
Tuticorin- 628002,
Tamilnadu, India.

Cell: 9360250211 ; +91 9944104697
Email: pancrasraja@gmail.com ;
            pancrasraja@rediffmail.com

                             















ADMINISTRATION




1. ORGANIZATION 



What is the fundamental principle of the Administration

 of this Society of Reparation?



From the full pledged members of this Society, those who consecrate themselves to the service Our Lady, will be accepted as members of the Administrative Body of the Society of Reparation to the Immaculate Heart of Mary.


How does the Administrative Body Function?

The permanent leadership rests only on the Mother of God. There can be no one except the Mother of God as the President or the Queen of this Society.
How ever, for the practical purpose of its administration, this Society has as its “Spiritual Directors” traditional priests who practice the Devotion of Reparation to the Immaculate heart of Mary.

When and if this Society is approved as a Religious Congregation by the competent authorities, its Superior General will govern the Society through out the world.

The Fitness of the Spiritual Directors

The Spiritual Directors of this Society will be always only those Traditional Catholic Priests who have received valid ordination to the authentic priesthood. They should be united with the Pope. They should be very faithful to the Traditional Doctrines and Liturgy of the Catholic Church. Over and above all these, they should have genuine and True Devotion to the Blessed Virgin Mary.

From among these Spiritual Directors, a priest most fitting and suitable will be selected as the “Director” (Superior General) of the Society of Reparation to the Immaculate Heart of Mary.

What are the duties of the “Director”?

As long as this Society remains as a Lay Apostolate, the Director will govern the Marian Crusaders of Reparation.

The Director will select the members of the administrative body and from among them he will select the most fitting one as the “Secretary”.
He will be responsible for all the activities of the Society and for the publications. He will take care of the discipline and regulations of the Head Quarters of the Society.

He will maintain all the properties with proper accounts, and submit for audit to the higher authorities.

The Director will regularly visit all the units of the Marian crusade of Reparation, conduct the Devotion of reparation under his supervision and strengthen members by carefully supervising their Spiritual Exercises.

Who are the other members of the Administrative Body?

From among the lay and religious full pledged members of the Society of Reparation, one who has dedicated himself whole heartedly for the growth of the Society will be selected as the “Secretary”. And also an Assistant Secretary, a Procurator, an Assistant Procurator, and the members of the administrative body will be selected.

What are the duties of the Secretary?

As the Secretary so the service and slavery to Our Lady and to Her Divine Son will be accomplished. And therefore, the Secretary should consider as his primary duty the service to the Society of Reparation. He should be always at the alert to see to it that all the activities are accomplished perfect. Namely, the weekly meetings, special meetings, conferences, spiritual exercises, propagating the devotion of reparation, and multiplying the units of the children and youth of the Marian Crusade of Reparation.

In every thing the secretary must consider it necessary to get the guidance, spiritual advice, and permission of the director.

In short, the secretary being an elder brother (or sister), and being a guide and model for all to reach Our lady, he will be a practical director for the administrative body of the Society of Reparation.

The secretary will regularly write the minutes of the meetings and present it in the meetings of the administrative body. He will keep the diary of the Shrine of Reparation without fail.

What are the duties of the other office bearers?

These office bearers are expected to be of help to the secretary in every thing.
Assistant secretary, will cooperate with the secretary in all the activities entrusted to him. In the absence of the secretary, with his permission, he will take charge of the duties of the secretary. 

Procurator, will find ways and means to protect and improve the properties and funds of the Society of Reparation, and exercise his office with temperance. He will present his accounts every month to the administrative body.

Assistant Procurator, will cooperate with the procurator in all his duties.
Members of the administrative body, will regularly attend the meetings of the administrative body and come forward to lend their helping hands in all the activities of the Society of Reparation.

However, the success of this Apostolate consists only in the fraternal cooperation of all the members of the Society of Reparation, in executing the duties and responsibilities. Even if some responsibilities are entrusted to some ones, the whole Society must function with the intention: “All for our Lady” and “All for Our Lord”.

2. THE HEADQUARTERS 

The International Head Quarters

The International Head Quarters will be established where the Founder and Director of this Society of Reparation resides. The International Spiritual Director (or the Superior General) will select the General Secretary, the General Procurator and the other office bearers to run the administration of the entire Society of Reparation to the Immaculate Heart, through out the world.

The Director or the Superior general will establish and run the International Shrine of Reparation where he is.

The National Head Quarters

Every Nation may have its National Head Quarters. According to the statutes of this Society of Reparation, The International Spiritual Director or The Superior General will appoint a traditional priest as the National Spiritual Directors; and the National Spiritual Director will establish the National Head Quarters where he is.

The National Spiritual Director may, in consultation with the Director or the Superior General, establish the Regional Head Quarters and a Shrine of Reparation; and will select a secretary, a procurator and the other office bearers to run the administration of that Nation.

The Regional Head Quarters

Every Diocese or many dioceses together can form the Regional head quarters. The Director or the Superior general will appoint a traditional priest as the Regional Spiritual Director.



CHAPTER 4

RESOURCES OF THIS APOSTOLATE






1. SPIRITUAL RESOURCES 


DAILY SPIRITUAL EXERCISES

Rising

Rising up punctually and promptly, greet Our Lady: “HAIL MARY!” as soon as you awake.  As a token of love and dependence, kiss your Crucifix, your Scapular and Medal.  Kneeling down say: “I am all Thine, O Immaculate Heart of Mary, and all that I have is Thine.” Then prostrating, recite the Prayers of the Angel of Fatima (Chapter 4.)

Morning Offering

On your knees, humbly beg Our Lady to bless you.  Unite yourself to Her Immaculate Heart; enter into Her disposition and say: “O Most Holy Trinity, I offer unto Thee Mary’s acts ofhumility, adoration, thanksgiving and praise.” Then you may add your own prayers.

Morning Prayer

In the Religious Communities of the Apostles of Our Lady, Morning Prayer is recited in common (Laudes or prime – in Latin).  The lay apostles may recite their morning prayers as given in the traditional prayer manuals in vernacular.

Morning Meditation

After Morning Prayer, at least half an hour is spent in silent meditation.  They consider attentively the subject of meditation chosen and prepared on the previous evening; unite themselves with Our Lady in order to win the Heart of Jesus; and resolve to practice a Christian virtue or to avoid some evil habit.

Holy Mass and Communion

While attending the Holy Sacrifice of the Mass, they adopt the admirable disposition of Our Lady at the foot of the cross; all kneeling, women covering their head.
They always kneel to receive Holy Communion on their tongues, humbling themselves profoundly and beseeching the Mother of God to lend Her own ear and disposition to receive Her Son.

Visit to the Blessed Sacrament and to the Blessed Virgin Mary

Jesus in the tabernacle is the gift of Mary.  He wishes that we always go to Him through Our Lady who is His throne.  The Apostles of Our Lady must have a deep and special devotion to the “Hidden Jesus” in the tabernacle, a devotion like that of little Francisco; and they must always remember that whatever honour they give to Jesus, they render it also to Our Lady.  They begin and end all their duties (if possible) by paying a visit to the Blessed Sacrament.

Spiritual Reading

The Marian Crusaders of Reparation shun as a poison the reading of all dangerous literature and novels; even news papers and magazines which are worthless.  Spiritual books, on the contrary, are like letters sent to them from Heaven, which bring them into Communication with the Saints and God Himself.
They choose their reading matter (in consultation with their spiritual director of course) mainly from books which treat of Our Lady, and which will help them to know her virtues and to increase their love for Her.  They should read and re-read the “Secret of Mary” and the “True Devotion to the Blessed Virgin Mary”, written by St. Louis De Monfort.

Every day they spend at least half an hour: fifteen minutes in the morning for Scripture Reading, and fifteen minutes in the evening for devotional reading in silence and if possible at fixed hours in common.

Holy Rosary

The Marian Crusaders of Reparation pray their daily Rosary with a special love and devotion.  They should be never content with saying the minimum five decades, but all the fifteen decades and even more.

Every day they come together three times to recite the “Rosary’ and the “Angelus” in common:
1.      Before Holy Mass in the morning
2.      Before Meals at noon
3.      Before Supper in the evening

During the months of May and October, and during all Benedictions of the Blessed Sacrament, they recite the Holy Rosary in front of the Blessed Sacrament exposed. 

Examination of Conscience

They must be very faithful to their daily examination of conscience, because this exercise causes the soul to advance more rapidly in acquiring union with Mary.  Five minutes during evening prayer are spent in silence for daily examination of conscience.

Evening Prayer

In the Religious Communities of the Society of Reparation, evening prayer is recited in common (Vespers or Compline – in Latin).  The lay apostles may recite the evening prayer as given in the traditional prayer manuals – in vernacular.
Reciting the Holy Rosary, Litany of the Blessed virgin, and the examination of conscience may precede or be inserted into the evening prayer.

Retiring

The Marian Crusaders of Reparation retire and take their night’s rest with Mary’s blessing upon them and under Her eyes.  Kneeling by the side of the bed, they say “Three Hail Mary’s”, in order to obtain through Her intercession the grace of a happy death.
Then they may add their own personal prayers.
Prostrating, they recite the Prayers of the Angel of Fatima.
Finally they say a “Hail Mary” in honour of their Guardian Angel that he may offer that Hail Mary for them to Our Lady at every hour of the night, and keep them safe from the illusionsof the enemy.
Should it happen that they awake during the night, their first sigh must be a yearning for Mary; and following the example of the Fatima children, they may  get up to recite the prayers of the Angel of Fatima, prostrating on the ground.

Thus the Marian Crusaders of Reparation sanctify the days and nights by observing these daily spiritual exercises – in union with the Blessed Virgin Mary.

2. WEEKLY SPIRITUAL EXERCISES

Weekly Cenacle meeting

The Marian Crusaders of Reparation meet once a week in small groups to pray the Rosary and to discuss about their spiritual progress in the apostolate, and to hear the spiritual conference of the spiritual director – if he is available.  In his absence, they may read a portion of this Web Site Manuel, and a passage from the “True Devotion to The Blessed Virgin Mary” by St. Louis De Montfort.

Fortnightly Confession

They approach the Sacrament of Confession every fortnight and receive spiritual directions from their confessor, who should be a traditional priest.
       
3. MONTHLY SPIRITUAL EXERCISES

First Saturday Devotion

Attending First Saturday Devotion is a must for the Marian Crusaders of Reparation.  If no priest is available for organizing the First Saturday Devotion in the locality, the lay apostles observe the conditions of the First Saturday Devotion in their private capacity, either individually or in a group.

Confession and Communion of reparation, reciting five decades of the Rosary and keeping company with Our Lady meditating the mysteries of the Rosary for fifteen minutes.  All these with the intention of making reparation for the offences committed against the Immaculate Heart of Mary.

The Marian Crusaders of Reparation do not stop with the Five First Saturdays, but continue to observe the devotion of reparation every month of the year.

All Night Vigil of Reparation

Once a month, preferably on the First Saturdays, the Marian Crusaders of Reparation spend a full night in vigil of prayer, sacrifice and reparation for the sins of mankind and for the sacrilege and blasphemies committed against the Sacred Heart of Jesus and the Immaculate Heart of Mary.

Monthly Fasting and Abstinence

Every First Friday they observe fasting and abstinence with the intention of heeding the request of Our Lady of Fatima, to offer sacrifices for the conversion of sinners.

Monthly Recollection

One Sunday of every month is a day of recollection.  Silence is observed till noon meals.  Special meditation points and spiritual conference by the spiritual director are arranged.
On the monthly recollection day, they spend an hour in front of the Blessed Sacrament to pray for the sanctification of the clergy, and to make reparation for the outrages, sacrilege and indifference committed against the Most Holy Eucharist.

4. ANNUAL SPIRITUAL EXERCISES

Renewal of the Total Consecration

Every year they renew their Consecration to the Immaculate Heart of Mary on the anniversary day (March 25), by repeating the 33 days preparation prescribed by St. Louis De Montfort. (See the Golden Book)

Annual Retreat

Every year they attend at least three days retreat conducted in a traditional manner, according to the Spiritual Exercises of St. Ignatius of Loyola or St. Louis De Monfort.

Annual General Conference

The Marian Crusaders of Reparation organize once a year general conferences in a Regional or National level, with a spiritual theme and programme, aimed at fostering the Devotion of reparation and hastening the Triumph of the Immaculate Heart of Mary, always under the direction of the spiritual Director.

Fatima Festival

The Marian Crusaders of Reparation celebrate every year the anniversary of the apparitionof Our Lady of Fatima on May 13, and on October 13 – with processions, Holy Mass and Benediction of the Blessed Sacrament.



2. MATERIAL RESOURCES 


(1) THE INTELLECTUAL MEANS 

FATIMA STUDY CIRCLES 

FATIMA CHILDREN AND YOUTH MOVEMENTS 

The Marian Crusaders of Reparation, under the direction of the Spiritual Director, will organize in their locality “Fatima Study Circles” for children and youth.
Once a week or at least twice a month, children and youth are invited to attend a regular course on "Catholic Doctrines" and ‘Fatima Catechism”, which aims at educating them in the traditional doctrines of the Catholic Church, deepening their knowledge on Fatima Message and developing in them a tender devotion and filial love towards the Mother of God.
Vocation to priesthood and religious life will be inculcated into their minds.
A “Youth Magazine” should be carefully edited and published exclusively for this purpose, by the Spiritual Director.

FATIMA PUBLICATIONS 

The official organ of the "Apostles of Our Lady" must be published by the National Headquarters regularly (quarterly or monthly).
All Fatima Publications are edited and published under the direct supervision of the Spiritual Director, who must be a traditional Priest.
As is apostolate bases its values primarily on God’s grace, and in the interior devotion to and the intimate union with the Immaculate Heart of Mary, the whole machine of the Devotion ofReparation should be directed towards the production and utilization of the ‘Spiritual Means”of grace.

(2) THE FINACIAL MEANS:

POVERTY AND HARD WORK 
  
The groath and expansion 

This apostolate builds its material means on the spirit of poverty and hard work.  Its growth and expansion depends totally on the providence of God.  Without this spirit, the apostolate, that is: drawing souls closer to the Immaculate Heart of Mary, will cease to exist.

Material help therefore should be channeled to establish DEVOTION TO THE IMMACULATE HEART OF MARY. For example: to foster Fatima Spiritual formation Centers, Shrines of Reparation, Convents and Monasteries of Perpetual Reparation .... etc.

Those who generously come forward to support such causes, will receive the reward abundantly through the Immaculate Heart of Mary.



THE PRAYERS AND HYMNS 

OF THIS DEVOTION OF REPARATION 





1. FATIMA PRAYERS


Adoration

O Most Holy Trinity, I adore Thee; my God, my God, I love Thee in the Most Blessed Sacrament.
Petition

Reparation

O My Jesus, forgive us our sins; save us from the fires of hell; lead all souls to heaven, especially those in most need of Thy mercy.

Offering

O my Jesus, it is for love of Thee, for the conversion of sinners, and in reparation for the offences committed against the Immaculate Heart of Mary I offer this sacrifice to Thee.

2. PRAYERS OF THE ANGEL OF FATIMA

Prayer for Pardon

My God, I believe, I adore, I hope and I love Thee. I ask pardon for those who do not believe, do not adore, do not hope and do not love Thee. (Thrice)

Prayer for Conversion

Most Holy Trinity, Father, Son, and Holy Ghost, I adore Thee profoundly. I offer Thee the Most precious Body, Blood, Soul and Divinity of Jesus Christ present in all he tabernacles of the world, in reparation for the outrages, sacrileges and indifference by which He is offended; and by the infinite merits of His Most Sacred Heart and through the Immaculate Heart of Mary, I beg for the conversion of poor sinners.

3. FATIMA PLEDGE

I Pledge myself to Our Lady Dear Queen and Mother, Who promised at Fatima to convert Russia and bring peace to all mankind; in reparation to Thine Immaculate Heart, for my sins and sins of the whole world, I solemnly promise to offer up every day the sacrifices demanded by my daily duty, to say the Rosary daily while meditating the mysteries, and to wear the Scapular of Mount Carmel as a profession of this promise and as an act of consecration to Thee, I shall renew this promise often, especially in the moment of temptation.
Date..................................
Place................................. (Signature)

4. ACT OF CONSECRATION TO THE IMMACULATE HEART OF MARY
(By St. Louis De Monfort)

O Immaculate Mother, I, (Name) an unfaithful sinner, renew and ratify today in Thy hands the promises of my Baptism; I renounce for ever Satan, his pomp and his works; and I give myself entirely to Jesus Christ, the Incarnate Wisdom, to carry my cross after Him all the days of my life, and to be more faithful to Him than I have been till now. I choose Thee this day, O Mary, in the presence of all the heavenly court, for my Mother and Mistress. I deliver and consecrate to Thee, as Thy slave, my body and soul, my goods both interior and exterior, and even the value of my good actions past,
present and future, I leave to Thee the entire and full right to dispose of me and all that belongs to me, without exception, as Thou pleasest, to the greater glory of God, in time and in eternity. Amen.

5. THE PROGRAM OF THE “CENACLE” MEETING

1. Opening Prayer

In the name of the Father, and of the Son and of the Holy Ghost. Amen.
Prayer to the Holy Ghost
Come, Holy Ghost, fill the hearts of Thy faithful and kindle in them the fire of Thy love.
V/. Send forth Thy Spirit, and they shall be created.
R/. And Thou shalt renew the face of the earth.
Let us Pray
O God, Who, by the light of Thy Holy Ghost, hast instructed the hearts of the faithful, grant that by the same Spirit we may have right understanding in all things, and ever more rejoice in His holy consolation; through Christ Our Lord. Amen.
Hail Mary........................................
V/. Seat of Wisdom,
R/. Pray for us.

Prayers of the Angel of Fatima

(See above No. 2 The Prayers of the Angel of Fatima)

2. The Most Holy Rosary: (Not less than five decades)
(Follow the method of St. Louis De Monfort, as found in the Prayer Book of the Devotion of Reparation)

3. Act Consecration to the Immaculate Heart of Mary.
See above No. 4 Act of Consecration to the Immaculate Heart of Mary)

4. Instruction. (Please do not omit)

Read a portion of this Manuel. (Especially on Fatima Message)
Read a portion of the Penny Catechism. (or from any other
Catechism Book)

Read a portion of the True Devotion to the Bl. Virgin Mary
By St. Louis De Monfort.

Give a short explanation if necessary – and hold a small discussion
on the matter read.

5. Resolution.

Make some practical resolutions on the following:

On the regularity of the “Cenacle” Meeting.

On the growth and multiplication of the Rosary groups.

On the spiritual growth of the apostolate.

On enrolling new members in the Society.

On attending the First Saturday Devotion.

On practicing and propagating the Devotion of Reparation.

6. Concluding Prayer.

We fly to Thy patronage, o Holy Mother of God, despise not our petitions in our necessities but deliver us always from all dangers, O glorious and Blessed Virgin. Amen.
In the name of the Father, and of the Son, and of the Holy Ghost. Amen.


THE HYMNS OF THIS DEVOTION


1. THE CHORUS OF THE MOTTO

TOTUS TUUS EGO SUM (LATIN)
(By St. Louis De Montfort)

Totus Tuus ego sum Regina mea, mea Mater,
Et omnia mea, et omnia mea, omnia mea  Tua sunt.

Totus Tuus ego sum, Regina mea, mea Mater,
Et omnia mea Tua sunt, omnia mea Tua sunt.

Totus Tuus ego sum, Regina mea, mea Mater,
Et omnia mea, Tua sunt, omnia mea Tua sunt.

TOTUS TUUS EGO SUM (ENGLISH)

I am all Thine Mary My Queen, and all I own I give Thee for ever
Thou art my Mother, and into Thy keeping,
All that I am and own I give to Thee.

I am all Thine O Mary my Queen,
And all that I’ll ever own I give Thee O Mother
My all is abandoned into Thy hands,
Now all I am and own belongs to Thee.

I am all Thine O Mary my Queen,
And all that I’ll ever own I give Thee O Mother,
My all is abandoned into Thy hands,
Now all I am and own belongs to Thee.

(Music: By Mr. George Annas, Ireland, 1944)

TOTUS TUUS EGO SUM (TAMIL)

முழுவதும் உமக்கே யான் சொந்தம்
என் இராக்கினியே என் தாயாரே
என் உடமைகள் யாவும்
என் உடமைகள் யாவும்
உடமைகள் யாவும் உமக்கே சொந்தம் 


முழுவதும் உமக்கே யான் சொந்தம்
என் இராக்கினியே என் தாயாரே
என் உடமைகள் யாவும் உமக்கே சொந்தம்
உடமைகள் யாவும் உமக்கே சொந்தம் 


முழுவதும் உமக்கே யான் சொந்தம் 
என் இராக்கினியே என் தாயாரே 
என் உடமைகள் யாவும் உமக்கே சொந்தம்
உடமைகள் யாவும் உமக்கே சொந்தம் 

2. THE FATIMA AVE

(English )

1. In Fatima Cove on the thirteenth of May,
The Virgin Maria appeared at mid-day.
AVE, AVE, AVE, MARIA – (2)

2. The world was then suffering from war, plague and strife,
And Portugal mourned for her great loss of life.
AVE, AVE, AVE, MARIA – (2)

3. The Virgin Maria surrounded by light,
God’s Mother is ours and She gives us this sight.
AVE, AVE, AVE, MARIA – (2)

4. To three shepherd children the Virgin then spoke,
A message so hopeful with peace for all folk.
AVE, AVE, AVE, MARIA – (2)

5. With sweet Mother’s pleading She asked us to pray,
Do penance, be modest, pray Rosary each day.
AVE, AVE, AVE, MARIA – (2)

6. All Portugal heard what God’s Mother did say,
Converted, she sings for her Queen to this day.
AVE, AVE, AVE, MARIA – (2)

7. We must all remember Our lady’s bequest,
Do all that She asks for obey Her requests.
AVE, AVE, AVE, MARIA – (2)

8. She warned us for fashions from which we must turn,
Of thoughts, words and actions which Christians must spurn.
AVE, AVE, AVE, MARIA – (2)

9. She told us that Jesus is so much offended,
And asked that our living be firmly amended.
AVE, AVE, AVE MARIA – (2)

10. To her sad sweet pleading our promise is made,
That God’s law in all things be strongly obeyed.
AVE, AVE, AVE, MARIA – (2)

11. From nation to nation Her fair name is praised,
As souls from sin’s bondage are contritely raised.
AVE, AVE, AVE, MARIA – (2)
AVE, AVE, AVE, MARIA - (2)

(Tamil)

பாத்திமா கோவா தா ஈரியாவில் 
காட்சியாய் வந்த எம் மாமரியே 

வாழ்க வாழ்க வாழ்க மரியே 
வாழ்க வாழ்க வாழ்க மரியே 

மின்னிய தேவனின் பேரோழியில் 
கன்னி மாரியம்மாள் காட்சி தந்தார் - வாழ்க வாழ்க

மூன்று சிறுவர்க்கு செய்தி சொல்லி 
தோன்றும் சமாதானம் பாரில் என்றார் - வாழ்க வாழ்க

தூய தவம் ஜெப மாலை சொல்வீர் 
தீய ஒழுக்கம் விடுவீர் என்றார் - வாழ்க வாழ்க

பொல்லாத பாணிகள் தொல்லை நின்று 
சொல் செயல் நினைவைக் காத்திடுவோம் - வாழ்க வாழ்க

சிசுவை இனிமேலும் வருத்தா வண்ணம்
மாசின்றி வாழ நல வாக்களிப்போம் - வாழ்க வாழ்க

பாவிகள் எல்லாம் மனந்திரும்ப 
பாவப்பரிகாரம் செய்திடுவோம் - வாழ்க வாழ்க

மாதாவின் பாத்திமா செய்தியெல்லாம் 
பாதம் பணிந்தே நாம் கேட்டிடுவோம் - வாழ்க வாழ்க



3. THE SANCTUARY ANTHEM
(English)

In Fatima Sanctu(a)ry of Reparation
O Hail O Hail Mary Immaculate!
Ave Ave Ave Maria!
Ave Ave Ave Maria!
(Latin)
In Fatima sanctum Reparationis
Ave Maria Immaculata!
Ave Ave Ave Maria!
Ave Ave Ave Maria!
(Tamil)
பாத்திமா பரிகார சந்நிதியில்
மாசில்லாத மரியாயே வாழ்க 
வாழ்க வாழ்க வாழ்க மரியே  
வாழ்க வாழ்க வாழ்க மரியே